ஹிந்தியன்!!!
தலைப்பை பார்த்துவிட்டு மொழிக்கு கொடி பிடிக்கும் பதிப்பு என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.. நமது தேசிய மொழியான ஹிந்தியை பற்றி ஒரு தமிழ் இளைஞனாக எனக்கு இந்த கால கட்டத்தில் என்ன தோன்றுகிறது என்பதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
கொசுவர்த்தி சுருளை சுற்ற தொடங்கினால் (அட "Rewind" பா) ஏறக்குறைய 16 வருடங்களுக்கு முன்பு - நான் காரைக்குடியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் ("இன்னைக்கு வரை அதானேடா படிச்சிருக்க" அப்படின்னு தூள் படம் மாதிரி லந்து பண்ணக்கூடாது). ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் schoolஇல் ஹிந்தி கட்டாயப்பாடம். நானும் காரைக்குடியில் ஹிந்தி டியூஷன் (Madhyama வரை - 2nd Level) படித்தேன். அப்பொழுதெல்லாம் Hindi Guides எல்லாம் திருச்சி தெப்பகுளம் பக்கத்தில் தான் கிடைக்கும். காரைக்குடியில் இருந்து திருச்சி போய் guide வாங்கி வந்து படித்த காலம் எல்லாம் உண்டு.. Coming back to the point..
சிறு வயதிலேயே எனக்கு தமிழ் பற்று அதிகம் (நான் ஆறாம் வகுப்பு முதற்கொண்டு படித்த செய்யுள்களில் பலவற்றை இன்னும் நினைவு வைத்துள்ளேன்).. தாய்மொழியை ஒழுங்காக கற்க வேண்டும் என்பதலேயோ என்னவோ -- ஆறாம் வகுப்பில் 2nd Language ஹிந்தியா இல்லை தமிழா , என்று வந்தபோது எனது பெற்றோர் தமிழ் என்று முடிவு செய்தனர்.. நானும் மனமுவந்து தமிழை படித்தேன்..(Matriculation examஇல் தமிழில் > 80%). ஆனால் மறுபக்கம் ஹிந்தியே வெறுக்கும் மனப்பான்மை உண்டானது ( கழக கண்மணிகளின் கைங்கர்யத்தால்).. அதனால் வாய்ப்பு இருந்தும் கூட என் ஹிந்தி அறிவானது எழுத படிக்க தெரிந்த அளவிலேயே முடிந்து போனது. இன்றைக்கு கூட யாரவது என்னிடம் ஹிந்தி பேசினால் "ஞே" தான்...
வேலைக்கு சென்ற பிறகும் கூட English கொடுத்த தைரியத்தால் ( Software company யாக இருந்தாலும் கூட எங்கள் அலுவலகத்தில் விதிவிலக்காக உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள்) ஹிந்தியை முற்றிலுமாக நிராகரித்து வந்தேன்.. Office இல் நன்றாக பேசிக்கொண்டு இருந்த ஒரு ஹிந்தி ஃபிகரின் பிரிண்ட்ஷிப்பை கூட இதனால் இழந்திருக்கிறேன் (ஒரு நாள் 'Do you know hindi' என்று கேட்டாள்.. நான் பந்தாவாக "ஹிந்தி மாலும் நஹி" என்று கிண்டலாக சொல்ல அவளும் "என்க்கும் தமில் தெர்யாது'' ன்னு தமிழிலேயே என் காலை வாரிவிட்டு சென்றுவிட்டாள்).
நாம தான் குப்பற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாத பார்ட்டியாச்சே!!! அடுத்த வாரமே Location change to - சென்னை மீனம்பாக்கம் airport.
கியூவுல நின்னுகிட்டே வழி அனுப்ப வந்த எங்க அப்பாகிட்ட எதோ பேசிகிட்டு இருந்தேன். அப்போ அங்க நின்ன north indian security guard ஒருத்தன் ஹிந்தியில 'ஜல்தி' அப்படிங்கற வார்த்தை கலந்து எதோ கோபமா சொன்னான் ( ''சீக்கிரம் நவுருடா'' அப்படீனு ரீஜெண்டா தான் திட்டுனான்னு நினைக்கிறன் - ஏன்னா ஒரு மொழியில என்ன தெரியுதோ இல்லையோ - பேடு words மட்டும் கட்டாயம் கத்துப்பேன்!! அடுத்தவன் திட்டும்போதாவது அவன் திட்டுரான்னு தெரியணும் இல்ல... ஹி ஹி!!) . டேய்.... எங்க ஏரியாவுக்குள்ள வந்து எங்ககிட்டயேவா அப்படின்னு நினைச்சுகிட்டே அவன்கிட்ட திரும்ப நக்கலா "ஹிந்தி மாலும் நஹி" அப்படின்னு சொன்னேன்.. எங்க அப்பா ரீஜெண்டா இருந்ததாலையோ என்னவோ - என்னை மொறைச்சுகிட்டே வாய்குள்ளேயே முணுமுணுத்தான்.. (என் காதில கேக்கலைனா கூட இது கண்டிப்பா பேடு word என்பது அவன் மொறைச்ச மொறைப்பிலேயே தெரிஞ்சுது...) பல ஆண்டுகளா மதுரை ஜெயிலில மைதானம் வெச்சு மல்யுத்தம் நடத்துனவைங்கடா நாங்க! அப்படின்னு நினைச்சுகிட்டே (சொல்லல - கையில துப்பாக்கி எல்லாம் வெச்சுருந்தான்) என்னாடா லுக்கு !! அப்படியே கண்ண நோண்டிபுடுவேங்குற ரேஞ்சுல பதிலுக்கு மொறைச்சுகிட்டு உள்ள போனேன்..
யானை தன் தலையில தானே மண்ண வாரி போட்டுக்கற மாதிரி நானே எனக்கு அடிக்கடி ஆப்பு வெச்சுக்குவேன்.. அவன் பத்திநனா இருந்துருப்பான் போல..(பத்தினிக்கு ஆண்பால் என்னன்னு யாரவது சொல்லுங்கப்பா).. என்ன சாபம் வுட்டான்னு தெரியல.. திரும்ப வரும்போது Paris ல connecting flight மிஸ் பண்ணிட்டோம். ஒரு நாள் கழிச்சு அவிங்க ஏரியாவான Mumbai வழியா return ticket மாத்தி குடுத்தாய்ங்க..நான் என்ன எதிர்பார்த்தேனோ அது கரெக்ட் ஆ நடந்தது..
"Security Checking" இல் என்னை check பண்ணின lady ஏதோ என்கிட்டே hindiல சொன்னாங்க.. நடுவுல 'Coat' அப்படிங்கற வார்த்த மட்டும் புரிஞ்சுது... நானே பேசாம மூடிகிட்டு கழட்டி குடுதுருக்கலாம் .. வாய் கேக்காம 'Could you please explain in english?' அப்படின்னு கேட்டேன்.. என்னை மொறைச்சுகிட்டே அவ கேட்ட மொத question - Which country are you from?. 'என்னடி, என் மூஞ்ச பாத்தா உனக்கு அமெரிக்கா காரன் மாதிரி தெரியுதா' அப்படின்னு நினைச்சுகிட்டு, அவளை பாத்து நானும் மொறைச்சுகிட்டே India அப்படின்னு சொன்னேன். Next question - Which state are you from?.. தமிழ்நாடு. அப்பறமா 'Please remove your coat' அப்படின்னு சொன்னா.. கேட்ட கேள்விகள் எக்கு தப்பா இருந்தாலும் intention ஒண்ணுதான்.. "இந்தியா ல இருந்துகிட்டு ஹிந்தி பேச மாட்டேங்கறியா" அப்படிங்கறது அவளோட view. "இந்தியால இருந்தா ஹிந்தி தெரியணுமா? என் தாய்மொழியும் ஆங்கிலமும் இந்த உலகத்தில் survive பண்ணறதுக்கு போதும்".. அப்படிங்கறது என்னோட view.
'Change is the only unchangable fact' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. நான் ஆணித்தரமாக நம்பிய மொழி சார்ந்த என் கருத்தை பொளேரென்று அறைந்து தலைகீழாக மாற்றுவதற்கு ஒரு நாள் வந்தது..Location change to Luxembourg.
Arcelor Mittal கம்பனியில் வேலை பார்க்கும் பல north indians இங்கே இருந்தாலும், அவர்களிடம் பழக்கம் என்பது maximum ஒரு smile உடன் முடிந்து விடும்.... (நமக்கு தான் ஹிந்தியும் ஹிந்தி காரர்களும் ஏழாம் பொறுத்தமாச்சே!!) நாங்கள் பழகுவது பெரும்பாலும் கூட வேலை பார்க்கும் தமிழர்களிடம் தான்..
வேலை பார்க்கும் போது கூட பணிபுரியும் வெள்ளைக்காரர்களை ஓட்டுவது என்றால் தமிழிலேயே ஓட்டுவோம்.. அலுவலக விஷயங்களை கிண்டலாக பேசுவது என்றால் தமிழிலேயே பேசுவோம் (சொல்ல போனால் இங்கு வந்த பிறகு தான் நாம் சகஜமாக உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகளுக்கு பதில் முழு தமிழ் வார்தைகள் அல்லது பட்டப் பெயர்கள் உபயோகிக்கின்றோம் - அவர்களுக்கு புரியக்கூடாது என்பதற்காக!! - உம் : Meeting - பொதுக்குழு, Project Manager - பெருந்தலைவர்)
ஒரு நாள் Luxembourg train station இல் ஜுரிச் செல்லும் trainக்காக நின்று கொண்டிருந்த போது
நம்ம ஊர் சாயலில் ஒரு இந்தியனை பார்த்தேன்.. அவன் சிரித்துக்கொண்டே வந்து இந்தியனா என்று ஆங்கிலத்தில் கேட்டான்..ஆமாம் என்று நட்புடன் கைகுலுக்கி விட்டு தமிழா என்று நான் கேட்டேன். 'இல்லை தெலுகு என்று சொன்னான்..(நாம் தான் தெலுங்கு என்று சொல்லுகிறோம்)'. நான் போகும் trainஇலேயே பாதி தூரம் அவனும் வர வேண்டி இருப்பதால் இருவரும் சேர்ந்து ஒரே compartmentஇல் உட்கார்ந்தோம்.. கூட ஒரு போர்ச்சுகீசிய lady மற்றும் பிரெஞ்சு girl. அவன் ஆரம்பத்திலேயே அனைவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தான் (அந்த french fishக்கு லைட்டா தூண்டில் வீசி பாத்தான் - மீன் சிக்கல.. ஹி ஹி அதுல நமக்கு ஒரு சந்தோஷம்). அதுக்கு பிறகு நாங்க ரெண்டு பெரும் கொஞ்ச நேரம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு வந்தோம்.. பேச்சு இந்தியா பக்கம் திரும்பியது... இங்க இருக்கும் வசதிகளை பற்றி உயர்வாக பேசினான்.. ஆமோதித்து விட்டு - ஆனால், its because everything was looted from india - அப்படின்னு நான் பேச்சை ஆரம்பிக்கும் போதே, பக்கத்தில் இருந்த ladiesக்கு புரிய கூடாது என்பதற்காக ஹிந்தியில் அவன் சரளமாக பேச ஆரம்பித்தான்... மத்தளதிற்கு ரெண்டு பக்கமும் அடி போல நான் அவனுக்கும் பதில் சொல்ல முடியாமல், இந்திய மானத்தை வெள்ளைகாரிகள் முன்பு கப்பல் ஏற்றவும் முடியாமல் திரு திரு என்று முழிக்க தொடங்கினேன்... இந்த தடவையும் எனக்கு தெரிந்த ஒரே வாக்கியம் திடீரென்று உதவிக்கு வந்தது... "ஹிந்தி மாலும் நஹி!!!!!" அவன் என்னை கேவலமாக ஒரு பார்வை பார்த்த பின்பு தான் எனக்கு நான் செய்த தவறுகள் எல்லாம் உறைக்க ஆரம்பித்தது... அதற்கு பின்பு மற்ற விஷயங்களை நாங்கள் சகஜமாக பேசிக்கொண்டு வந்தாலும், நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த தவறான எண்ணங்கள் மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது...
* National Security Guard வேலை பார்க்கும் இடத்தில எல்லாம் இருக்கற local language கத்துக்கிட்டு எப்படி பேசுவான்??... National language தெரியாதது உன் தப்பு.. உன் ஏரியாவுக்குள்ள உன் language தான் பேசணும்னு நினைக்கறது அத விட தப்பு... அதே மாதிரி இந்த மக்கள் எல்லாரும் நெனைச்சு இருந்தா, யூதர்களுக்கு அடுத்தபடியா உலகெங்கும் பரவி இருக்கும் தமிழ் மக்கள் யாரும் வேலையே பாக்க முடியாது (என்னையும் சேத்து)..
* மும்பை Security officer கடுப்பானது கூட valid மாதிரி தான் தெரியுது... இந்தியால இருந்துகிட்டு National language பேசுறப்போ "ஞே" ன்னு ஒரு இந்தியன் நின்னா - நான் அந்த positionல இருந்தா கூட கடுப்பாவேன்...

* தமிழன், தெலுங்கன், mallu எல்லாம் இந்தியாவுக்கு உள்ளே தான்.. மற்ற இடங்களில் எல்லாம் நமது அடையாளம் 'இந்தியன்' தான்..
* உலகத்துக்கே பொது மொழியை தெரிந்து வைத்து இருந்தாலும் இந்தியா மாதிரி பல மொழிகளை கொண்ட தேசத்திற்கு - அவர்களுக்குள்ளேயே communicate செய்வதற்கு ஒரு பொது மொழி தேவை.. அது பெரும்பான்மை மக்களால் ஏற்கனவே பேசப்படும்போது சிறுபான்மை மக்கள் கூடுதலாக கற்று கொள்வதில் தவறு இல்லை..
* பொது மொழியை தெரிந்து வைத்திருந்தால் தான் சக இந்திய குடிமகனும் உன்னை மதிப்பான்.. Moreover இந்தியன் என்று உனக்கே நம்பிக்கை வரும்...
* National Security Guard வேலை பார்க்கும் இடத்தில எல்லாம் இருக்கற local language கத்துக்கிட்டு எப்படி பேசுவான்??... National language தெரியாதது உன் தப்பு.. உன் ஏரியாவுக்குள்ள உன் language தான் பேசணும்னு நினைக்கறது அத விட தப்பு... அதே மாதிரி இந்த மக்கள் எல்லாரும் நெனைச்சு இருந்தா, யூதர்களுக்கு அடுத்தபடியா உலகெங்கும் பரவி இருக்கும் தமிழ் மக்கள் யாரும் வேலையே பாக்க முடியாது (என்னையும் சேத்து)..
* மும்பை Security officer கடுப்பானது கூட valid மாதிரி தான் தெரியுது... இந்தியால இருந்துகிட்டு National language பேசுறப்போ "ஞே" ன்னு ஒரு இந்தியன் நின்னா - நான் அந்த positionல இருந்தா கூட கடுப்பாவேன்...
இந்த வரிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக விளங்கும் ஒரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது...
Tamil Nadu was the site of violent anti-Hindi riots in 1965 when the union government tried to impose Hindi as the sole official language of India, and there is still some residual hostility towards Hindi, so try to pick up some instant Tamil here. Even if you are in Chennai, do not try to speak to locals in Hindi, as many will find it offensive. English works in almost all the cities.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளே... இந்தியாவில் தமிழ்நாடு என்னும் மாநிலத்திற்கு செல்லும் போது மட்டும் உங்கள் மொழியான ஆங்கிலத்தை உபயோகியுங்கள்.. இந்திய தேசிய மொழியான ஹிந்தியை உபயோகப்படுத்தினால் அவர்கள் வெறி கொள்ள கூடும்.. இதை படிக்கும் ஒரு ஒரு வெளிநாட்டுக்காரனும் தமிழகத்தை பற்றி என்ன நினைப்பான்?
தமிழின தலைவர் என்று தனக்கு தானே கூறிக்கொள்ளும் நபரைப் பற்றி சிறப்பாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், ஆரம்ப கால கட்டத்தில் கழக கண்மணிகளுடன் தமிழுக்காக ரயில் மறியல் செய்த ஒரு விஷயத்தை பெருமையாக எண்ணிக் கொண்டு இருந்தோம்.. ஆனால் அது கூட ஒரு தலைமுறையையே தலைகுனிய வைக்கும் விஷயம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தான் புரிகிறது.. அடுத்து வரும் தலைமுறை இந்தியாவில் படிக்கும்போது தமிழோடு சேர்ந்து ஹிந்தியையும் படிக்க வேண்டும் என்பதே என் ஆசை.. ஒரு தலைமுறை செய்த தவறை இன்னொரு தலைமுறையும் செய்ய வேண்டாம்...
ஒரு எழுத்தாளர் சொல்கிறார் - "வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் தங்களுக்குள்ளேயே பழகி கொண்டு இருக்கின்றனர்.. எந்த இடத்தில இருக்கிறோமோ அந்த நீரோட்டத்தில் கலந்துவிட வேண்டும்.. அப்பொழுது தான் அந்த இடத்தில அமைதியாக வாழ முடியும்..". மிகச்சரியான கருத்து. ஆனால் அதற்க்கு விலையாக நமது சுயத்தை இழக்க நேரிடும் பொழுதுதான் குழப்பங்கள் தோன்றுகின்றன. எந்த விஷயதை எடுத்தாலும் நன்மைகளும் இருக்கும்.. தீமைகளும் இருக்கும்... ஹிந்தி படிப்பதனால் விளையும் நன்மை - தேசிய நீரோட்டத்தில் கலப்பது. வெளிநாட்டு நண்பர்களுடன் நான் பேசிக்கொண்டு இருக்கும்போது எனக்கு தெரிய வந்தது என்னவென்றால் - அவர்களும் நம்மை போலவே உறவுகளுக்கு மரியாதை கொடுத்து குடும்பமாக வாழ்ந்த காலம் எல்லாம் இருந்திருக்கின்றது, இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு.. (இதை பற்றி பேச ஆரம்பித்தால் தனி பதிவே போடலாம்).. விஷயம் என்னவென்றால் இந்தியாவில் தான் கணவன் மனைவி உறவும், குடும்பம் என்ற அமைப்பும் இன்னும் இருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் இந்திய கலாச்சாரத்தை கொஞ்சமாவது காப்பாற்றி கொண்டு இருப்பது தமிழ்நாடுதான் என்பது என் கருத்து.. இப்பொழுதே பெரும்பாலான வட இந்திய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் western culture க்கு மாறி விட்டன.. நமது தொலைகாட்சிகள் எல்லாம் நல்லவை என்று சொல்ல வரவில்லை - மானாட மயிலாட (ராமதாஸ் சொன்னது போல - மார்பாட)வும் இருக்கிறது, அதே சமயத்தில் மக்கள் தொலைகாட்சியும் இருக்கின்றது. Jungle Se Mujhe Bachao போன்ற ரியாலிட்டி ஷோக்களை தமிழ்நாட்டில் வர விடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?. தேசிய நீரோட்டத்தில் கலக்கும் பொழுது நல்லது எது, தீயது எது என்று பகுத்தறிந்து செல்லும் பக்குவத்தை இளம் தலைமுறைக்கு எப்படி சொல்வது?.
* சுயத்தை இழக்காமல் தனித்து இருப்பது நல்லதா?
* இல்லை சுயத்தை இழந்தாலும் பொதுநலத்துக்காக சில தியாகங்கள் செய்வது நல்லதா?
* இல்லை இரண்டையுமே இழக்காமல் முன்னேற முடியுமா?
விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் !!!!

விரிவான ஆனால் சுவாரஸ்யமான அலசல். பல ம்வருடங்களுக்கு முன்னாள் ஷார்ஜாவில் ஒரு பாகிஸ்தானிய டாக்சி டிரைவரிடம் நான் இறங்கும் இடம் வந்துவிட்டது என்பதை ஆங்கிலத்தில் சொல்லப்போக (அப்போது இந்தி ஒரு அட்சரம்கூட தெரியாது) நீ இந்தியனாக /ஹிந்துஸ்தானி யாக இருந்துகொண்டு ஏன் ஆங்கிரேசியில் பேசுகிறாய் என்று என்னை வெறுப்பேற்ற , எனக்கு வந்த எரிச்சலும் அவமானமும் என்னை இந்தி கற்றுக்கொள்ள வைத்தது உண்மை. உடன் வேலைசெய்த ஒரு பாகிஸ்தானிய நண்பனே எனக்கு உருது கற்று கொடுக்க , சில மாதங்களில் இந்தி தெரியாது என்று என்னை நக்கல் அடித்து வெருபேற்றிய மல்லு,தமிழ் லொள்ளுகள் எல்லாம் என்னிடம் சற்று பணிவுடன் நடக்க ஆரம்பித்தார்கள். காரணம் அந்த பாகிஸ்தானிய நண்பன் அற்று கொடுத்த உர்து (இந்தி) நம்மூர் காரர்கள் பேசும் "உடைந்த டப்பா " இந்தியை விட சுத்தமாக இருந்ததுதான். வேறு ஒரு மொழியை நாம் மேலும் கற்றுக்கொள்வதால் யாரும் தம் சுயத்தை இழப்பதில்லை. மொழி ஒரு வசதியே அன்றி அதனால் ஒருவரின் சுயம் எப்படி மாறிப்போகும்? இதெல்லாம் நம்மூர் "திராவிடம்" பேசும் கருபுசட்டைகாரகளின் பம்மாத்து.
ReplyDeleteநட்டி, ஹிந்தியை மறுத்தால் நாம் இழந்தது பல, பெற்றது சில மட்டுமே. சமீபத்திய உதாரணம், பல பேருக்கு anna hazare பற்றி ஒரு பற்று வராமலே போகும், காரணம் அவர் north indian. அது மட்டும் அல்ல, இந்தியாவின் பல கலாச்சார சுவாரசியங்களை இந்தி மொழி தெரியாததால பல பேர் miss பண்றாங்கன்னு நான் சொல்வேன். மத்தபடி உன்னோட self டப்பாவ விட்டுட்டு படிச்சோம்னா இது ஒரு நல்ல கட்டுரை, ஹி ஹி ஹி (உன்ன வாரலேன்னா எப்புடி?)!
ReplyDelete@ சுக்கு மாணிக்கம் - கருத்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉங்களை போன்றே வெளிநாட்டில் வேலை பார்க்கும் பலருக்கும் (குறிப்பாக அரேபிய தேசங்களில்) இது போன்ற அனுபவம் கண்டிப்பாக இருக்கும் என்றே தொண்டுகிறது.. இந்தியாவை வைத்து பார்க்கும்பொழுது - ஒரு மொழி வாழும் இடத்தில் அந்த மொழியை மட்டுமே நாம் கற்று கொள்வதில்லை.. அந்த கலாச்சார பாதிப்புகளும் விஷம் போல கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும் என்று தான் எனக்கு தோன்றுகிறது... ஆனால் அது நம் சுயத்தை இழக்கும் அளவிற்கு இருக்காதுதான் ... விருமாண்டி படத்தின் ஒரு பேட்டியில் கலாச்சாரம் பற்றி கமல் கேட்ட கேள்வி தான் ஞாபகம் வருகிறது... :)
http://www.youtube.com/watch?v=w-TUL7XIbAE
@ Somz: Very true somz... அன்னா ஹசாரே விஷயத்தில் நமது ஊடகங்கள் (தினமலர் தவிர்த்து) செய்தது மிகக்கொடுமை... ஒரே குடும்பத்தின் கீழ் ஊடகங்கள் அனைத்தும் இருந்தால் நடக்கும் கொடுமைக்கு இது ஒரு மோசமான உதாரணம்... கிரி சொன்னது போல (http://www.giriblog.com/2011/04/tamilnadu-avoid-anna-hazare.html) தமிழக பிரபலங்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை... :( .. மற்றபடி இந்த கால் வாரல்களுக்கு எல்லாம் கவலை படுற ஆளா நம்ப எல்லாம்?? ;)
ReplyDeleteகசக்குது...உண்மை தான் மச்சி...
ReplyDeleteஹிந்தி தெரியமா படுற கஷ்டம் நம்ம தலைமுறையோடு போகட்டும்... புள்ள குட்டிகளுக்கு ஹிந்தியும் சொல்லி குடுப்போம்.
அது சரி...மும்பை லேடி, உன்ன அமெரிக்கா காரனா நினச்சு கேட்டு இருக்கமாட்டா... ஆப்ரிக்___ ???
நான் நெனச்சேன், என்னடா நமக்கு தோணினது யாருக்குமே தோணலையா ன்னு... கரெக்டா வந்துட்ட.. ஆப்ரிக் கூட workout ஆகும் மச்சி ;) அங்க dhaka வுல எப்படி? ஹிந்தியா இல்ல வங்காளமா?
ReplyDelete\\ஒரு நாள் கழிச்சு அவிங்க ஏரியாவான Mumbai வழியா return ticket மாத்தி குடுத்தாய்ங்க..\\ என்ன சொல்றீங்க, மும்பையில் ஹிந்தி காரர்களை ஓட ஓட அடித்து விரட்டிய கதை சமீபத்தில் நடந்ததே, உங்களுக்குத் தெரியாதா? அப்புறம் அமிதாப்பின் மனைவி ஒரு கூட்ட்டதில் ஹிந்தி பேசினார் என்று பெரிய கலாட்டாவானது.
ReplyDelete\\தமிழின தலைவர் என்று தனக்கு தானே கூறிக்கொள்ளும் நபரைப் பற்றி சிறப்பாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், ஆரம்ப கால கட்டத்தில் கழக கண்மணிகளுடன் தமிழுக்காக ரயில் மறியல் செய்த ஒரு விஷயத்தை பெருமையாக எண்ணிக் கொண்டு இருந்தோம்.\\ எவன் கஊடிச் சுவராப் போன எனக்கென்ன நான் நல்லா இருந்தா போதும் என்ற மகா மட்டரகமான எண்ணத்தினால் வந்த வினை இது, அதை நம்பி ஆதரித்த முட்டாள் தமிழன் இன்று அனுபவிக்கிறான். ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும். ஹிந்தியால் சுயத்தை இழக்கிறேன் என்றால் ஆங்கிலத்தால் மட்டும் இழக்க மாட்டோமா?
ReplyDelete\\ஆனால் இந்திய கலாச்சாரத்தை கொஞ்சமாவது காப்பாற்றி கொண்டு இருப்பது தமிழ்நாடுதான் என்பது என் கருத்து.\\ சர்வ நாசமாயிடிச்சுங்க சார், சுத்தமா குட்டிச் சுவராயிடுச்சு.
ReplyDeletewho said Hindi is Indiana national language? look what if u go to US, Uk & other country is't they will speak Hindi. if u like u can learn any language, but the language should not use as tool to oppress other people especially tamilis. their is no language comes near to Tamil. from the point ur view everyone in tamilnadu should learn Hindi. what abt UAE if u go their most of them speak Malayalam so everyone has to learn malayalam. my mother tongue TAMIL is better then other language for me.
ReplyDelete@Jayadev: கருத்துக்கு நன்றி.. மும்பையில் ஹிந்தி அதிகமாக புழங்குவதாலேயே ஹிந்தி பேசுபவர்கள் தாக்கப்பட்டனர்... மேலும் மகாராஷ்டிரதுக்கு கீழே உள்ளவர்கள் அனைவரையும் வட இந்தியர்கள் "மதராசி" என்று அழைப்பது போல, கர்நாடகத்திற்கு மேலே உள்ளவர்கள் எல்லாம் நமக்கு "ஹிந்திக்கரர்கள்" தானே (ஹி ஹி ..) ஆங்கிலேயர்கள் இருந்தபொழுது ஆங்கில நாகரித்தின் தாக்கங்கள் இருந்தது.. (கோர்ட்டில் MY LORD என்பது போன்ற வார்த்தைகள் எல்லாம் அவர்களது கலாச்சார எச்சங்கள் தான்.. அவர்கள் இடத்தை காலி செய்துவிட்டதால் அவர்களின் தாக்கம் நமக்கு குறைவாக இருக்கிறது என்பது என் கருத்து... இடிந்து கொண்டிருக்கும் கலாச்சாரம் குட்டிச்சுவராக மாறாமல் இருக்க நம்மால் முடிந்ததை செய்வோம்.. (மாற்றங்களை செய்ய முடியவில்லை என்றாலும் குற்ற உணர்வு இருக்காது.. Atleast நம் மனசாட்சிக்காவது ஒரு சுய திருப்தி கிடைக்கும்)
ReplyDelete@ Haja Sulthan: Eventhough I cant understand completely (or) my interpretation might be wrong, I like your pride for our mother tongue. தமிழின் மீது பற்று உள்ள நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கி தமிழிலேயே உங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்..
ReplyDelete@நட்டி, என்னால முடிஞ்ச செருப்படிய என்னோட blog-ல குடுத்து இருக்கேன்.
ReplyDeletehttp://silukkujippa.blogspot.com/2011/04/blog-post.html
This comment has been removed by the author.
ReplyDeleteஎதுவுமே நாமாக கற்றுக்கொள்ள வேண்டும்... திணிக்கக் கூடாது...
ReplyDelete//Hindi as the sole official language of India,//
ReplyDeleteஅப்டின்னா, "ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி" ன்னு அர்த்தமா ஆப்பிசர்?