Google Image Search - படத்தை வைத்து படம் போடுவது எப்படி??
நமக்கு தேவையான படங்களை (images) தேடுவதற்கு மட்டும் கூகுளாண்டவரின் உதவியை உபயோகப்படுத்திக்கொண்டு வந்திருப்போம். சற்று மாற்றி யோசித்து பாருங்கள்!! நம்மிடம் ஒரு அழகான படம் இருக்கிறது. அது நம் நண்பரின் forwarded மெயிலில் வந்து இருக்கலாம். அல்லது இன்டர்நெட்டில் இருந்து சுட்ட படமாக இருக்கலாம். ஆனால் அந்த படத்தில் இருக்கும் நபர் அல்லது object யார், அதை யார் படம் பிடித்தார் அல்லது உருவாக்கினார் போன்ற விபரங்கள் நமக்கு தெரிவதில்லை. இது போன்ற தலைகீழ் விபரங்களை நமக்கு தேடித்தரும் தேடியந்திரங்களை "Reverse image search engines" என்று அழைப்பார்கள்.
இந்த டெக்னாலஜியில் முன்னணியில் இருக்கும் இயந்திரங்கள் நமது கூகிள் ஆண்டவர் மற்றும் தகரக் கண்ணன் (http://www.tineye.com/) ஆவர். தகரக் கண்ணன் இந்த டெக்னாலஜியில் முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டாலும், நமது மனதிற்கு பிடித்த கூகுளாண்டவரை வைத்து தேடுவதை இப்பொழுது பார்க்கலாம்.
வழக்கம் போல www.google.com சென்று விட்டு images என்ற tab தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான். மற்றவற்றை கூகுளாண்டவர் பார்த்துக்கொள்வார்!!
ஹட்ச் நாய்குட்டி விளம்பரத்தை நாம் பலமுறை கண்டு ரசித்து இருப்போம். அது "பக்" வகை நாய் என்று கூட நம்மில் பலருக்கு தெரிந்து இருக்கும். ஆனால் அந்த நாய் பெயர் என்ன, கூட இருக்கும் பொடியன் யார் போன்ற விபரங்கள் எனக்கும் தெரியாது..... கூகுளாண்டவர் உதவி கிடைக்கும் வரை!!!
கேபிள்சங்கர் தனது கதைகளில் போடும் சிறப்பான(??) படங்களை எங்கிருந்து எல்லாம் சுடுகிறார் என்ற சந்தேகமும் இப்பொழுது தீர்ந்தது!!! ஹி ஹி....
மேலும் சில படங்கள் நம்மை வெகுவாக கவர்ந்திருக்கும். அவற்றை commercial purpose க்காக உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைப்போம். ஆனால் படத்தை பலபேர் சுட்டு பயன்படுத்தி இருப்பார்கள். உண்மையான பட உரிமையாளரை கண்டு பிடிப்பதற்கு என்ன செய்வது என்று யோசிக்கும்போதும் தகரக்கண்ணன் நமக்கு துணைபுரிகின்றார்!!. எப்படி என்பதற்கு இந்த பதிவை படிக்கவும்.
http://howto.wired.com/wiki/Figure_Out_Where_a_Photo_Originated
அம்புட்டுதேன்!!!





தகரக் கண்ணன் // ஹி ஹி நல்ல பெயர் தான் கொடுத்து இருக்கீங்க பாஸ்
ReplyDeleteஹி ஹி!!!
ReplyDeletenice post :), "google goggles" mobile app is also doing the same thing I belive
ReplyDeleteThanks vinod :) And yeah, 'google goggles' is more powerful and 'google glasses' is also based on it I guess.
ReplyDelete